புதினங்களின் சங்கமம்

கோத்தபாயவின் கோட்டைக்குள் மீட்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்கள்!! நடிகை உட்பட்ட 3 பெண்களின் டீஎன்ஏயை பரிசோதிக்க உத்தரவு!!

இலங்கையின் ஊழல் ஆட்சியமைப்புக்கு எதிரான 2022 வெகுஜன எழுச்சியின் போது, ஜூலை 9, அன்று ஜனாதிபதி செயலகத்திற்குள் செயற்பாட்டாளர்களாக நுழைந்த சம்பவத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட மூத்த நடிகை தமிதா அபேரத்ன உள்ளிட்ட மூன்று பெண்களின் இரத்த மாதிரிகள் தொடர்பான டி. என். ஏ. பரிசோதனைக்காக அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி அரச சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (15) உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் கண்டெடுக்கப்பட்ட 6 சானிட்டரி நாப்கின்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் மூவருக்கும் இரத்த மாதிரிகளை வழங்க உத்தரவிடுமாறு கொழும்பு வடக்கு குற்றப் பிரிவு நீதிமன்றினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் பரிசீலித்தார். தமிதா அபேரத்ன, நோனா முரின் மற்றும் சச்சினி கௌசல்யா ஆகிய மூன்று பெண்களுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.