வெடுக்குநாறியில் சிவனைக் கும்பிட்டவர்கள் சிறைக்குள் உண்ணாவிரதம்!! நடப்பது என்ன?
வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , வவுனியா நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 08 பேரில் ஐந்து பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவராத்திரி தினமான கடந்த 08ஆம் திகதி வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஐவரை பொலிஸார் கைது செய்து மறுநாள் 09ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை நேற்றைய தினம் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அந்நிலையில் நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த 08 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டு , முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 08 பேரையும் தொடர்ந்து 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 08 பேரில் ஐந்து பேர் நேற்றைய தினம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.