புதினங்களின் சங்கமம்

பல்கலைகழக மருத்துவபீட மாணவன் மதுஷான் பலி!!

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் இசுரு மதுஷான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், மகாவலி கங்கையின் கல்பொத்தவல என்ற இடத்தில் நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது மாணவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் மாணவனை கரைக்கு கொண்டு வந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ மாணவர் துரதிஷ்டவசமாக இன்று (04) உயிரிழந்துள்ளார்.