புதினங்களின் சங்கமம்

யாழில் நடந்த பம்பல் சம்பம்!! CCTV கமராவுக்கு செலோரேப் ஒட்டிவிட்டு ஊழியர்கள் நித்திரை !! கள்ளனால் பிடிபட்டது எப்படி?

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில், நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருப்பதற்காக, கண்காணிப்பு கமராவில் பிளாஸ்ர் ஒட்டி மறைத்து விட்டு தூங்கிய ஊழியர்களிடமிருந்து பணம், கைத்தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

கொள்ளையிட்ட நபரை நெல்லியடி பொலிசார் கைது செய்தனர்.</p
நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையக உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இந்த சம்பவம் அண்மையில் நடந்தது. கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது இந்த எரிபொருள் நிரப்பும் நிலையம்.

24 மணித்தியாலமும் தமது எரிபொருள் நிரப்பும் நிலையம் திறந்திருக்கும் என சில காலத்தின் முன்னரே நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், பின்னிரவு அல்லது விடிகாலையில் எரிபொருள் நிரப்ப சென்றால், அங்கு ஊழியர்கள் உறக்கத்தில் இருப்பார்கள், அவர்களை எழுப்பி எரிபொருள் நிரப்புவது பெரும்பாடு என பிரதேச மக்கள் குறிப்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில், அண்மையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் இரவு வேளை நுழைந்த மர்மநபர் ஒருவர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடிச் சென்றதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த போது, திருடன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் இரவு நேரம் நுழைந்த போது, காவலாளியும், எரிபொருள் நிரப்பு நிலைய கடமையிலிருந்தவர்களும் நல்ல உறக்கத்தில் இருந்தது தெரிய வந்தது. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் உள்ள கண்காணிப்பு கமராவின் மூலம் நிர்வாகத்தினர் இதை அவதானித்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக, கண்காணிப்பு கமராவை பிளாஸ்டர் மூலம் மூடி ஒட்டி- மறைத்து விட்டே அனைவரும் அசந்து தூங்கியுள்ளனர்.

கண்காணிப்பு கமரா மறைக்கப்பட்டதால் திருடனை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை. இருந்தாலும், பொலிசார் பல்வேறு வழிகளில் விசாரணைகளை மேற்கொண்டு திருடனை கைது செய்தனர்.

நீர்கொழும்பை சேர்ந்த 43 வயதான ஒருவர் உடுப்பிட்டியில் திருமணம் செய்துள்ளார். அவரே திருட்டில் ஈடுபட்டார். எரிபொருள் நிரப்பு நிலையம் தவிர, நகரிலுள்ள பிரபல ஆடையகம் ஒன்றிலும் திருட முயற்சித்து, அதன் மேற்கூரையை உடைத்துள்ளார். எனினும், அவரால் உள்நுழைய முடியாததால் திருட்டு மயற்சியை கைவிட்டுள்ளார்.

பொலிசாரின் விசாரணையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைத்தொலைபேசி மட்டுமல்ல, பணமும் திருடப்பட்டது தெரிய வந்தது. எனினும், தமது வேலைக்கு வேட்டு வைக்கும் என்பதாலோ என்னவோ, ஊழியர்கள் பணம் திருடப்பட்டது பற்றிய முறைப்பாட்டை செய்யவில்லை.