புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் 69 வயது யாழ் இளைஞர் 63 வயது மனைவியை விவாகரத்து!! 40 வயது கிளிநொச்சி பெண்ணை மறு திருமணம்!!

சுவிஸ்லாந்தில் சூரிச் பகுதியில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் தணிகாசலம் எனும் 69 வயதான இளைஞர் தனது மனைவியான 63 வயதான பெண்மணியை அண்மையில் விவாகரத்து செய்துள்ளார். தற்போது கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதான குடும்பப் பெண் ஒருவரை திருமணம் செய்வதற்காக கிளிநொச்சியில் வந்து தங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

வருகின்ற சனிக்கிழமை இவர்களுக்கு வெகு சிறப்பாக திருமணம் நடைபெறவுள்ளது. குறித்த முதியவரான இளைஞருக்கு 3 பிள்ளைகள். 40 வயதில் மூத்த மகளும் அந்த மகளுக்கு 3 பேரக்குழந்தைகளும் உள்ளார்கள்கள். இரண்டாவது மகளுக்கு 36 வயது. அந்த மகளுக்கும் 2 பேரக்குழந்தைகள். மூன்றாவது மகனுக்கு 33 வயது. அவரும் அண்மையில் திருமணம் முடித்து குழந்தையும் பிறந்துள்ளது. இந் நிலையிலேயே தனது மூத்த மகளின் வயதை ஒத்த பெண்ணை தணிகாசலம் திருமணம் முடிக்கவுள்ளார். கிளிநொச்சிப் பகுதியில் வசிக்கும் சமூகவலைத்தளங்களில் உதவி கோரி பதிவுகள் இடும் ஒருவரது துணையுடனேயே குறித்த கிளிநொச்சி குடும்பப் பெண்ணுடன் காதல் இணைப்பை ஏற்படுத்தியுள்ளார் தணிகாசலம்.

கிளிநொச்சிப் பெண்ணின் கணவர் போதைப்பொருள் வழக்கு மற்றும் இன்னொரு வழக்கில் பிடிபட்டு சிறைக்குள் இருந்தவர். இந் நிலையில் குறித்த பெண்ணும் கணவரை விட்டுப் பிரிந்து சில காலம் தனது 14 வயதான மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். தற்போது தணிகாசலத்தின் துண்டுதலின் பேரில் கணவனை விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ்லாந்தில் உள்ள பிள்ளைகள் தணிகாசலத்தின் திருமணத்தை நிறுத்த தலைகீழாக நிற்பதாக தெரியவருகின்றது. இருப்பினும் சமூகவலைத்தளங்களில் கிளிநொச்சியில் உள்ளவர்களை காரணம் காட்டி உதவி கேட்டு வீடியோ வெளியிடும் குறித்த நபர் ஒருவர் அங்குள்ள பிள்ளைகளை அச்சுறுத்தி வருவதாகவும் பிள்ளைகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியியாகியுள்ளன.

தணிகாசலம் இரண்டாவது திருமணம் முடித்தவுடன் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் சமூகவலைத்தளத்தில் தணிகாசலத்தின் பிள்ளைகளை அச்சுறுத்தியவரின் புகைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் என்பவற்றை நாம் வெளியிடுவோம் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.