யாழ் கோப்பாய் பொலிஸ்காரன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!!
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, கன்னியாயில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைதான பொலிஸ் உத்தியோகத்தர் மன்னாரை சேர்ந்தவர்.
