புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி பெருமாள் ஆலய தேர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பவித்திரன் மின்சாரம் தாக்கிப் பலி!! Photos

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் கோயில் தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இன்று (8) பகல் 11.20 மணியலவில் இந்த சம்பவம் நடந்தது.இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பவித்திரன் (29) என்ற இளைஞனே உயிரிழந்தார்.உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

May be an image of 8 people and motorcycle