புதினங்களின் சங்கமம்

யாழில் 3.5 கஞ்சா கிலோ கடத்தி பிடிபட்டவர்கள் இவர்கள்தான்!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர். கடற்படையினரின் தகவலுக்கமையசந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா பொதிகளை கொண்டு சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 3.5 கிலோகிராம் வரையான கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்களையும் கைப்பற்ற கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.