புதினங்களின் சங்கமம்

பிரான்சில் கைதான இலங்கையின் பிரபல பாதாள உலக போதைப் பொருள் கடத்தல்காரன் விடுதலை!!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதற்கிடையில், குற்றவாளியின் விடுதலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் போதைப்பொருள் விருந்து மற்றும் பட்டாசு கொளுத்திய குற்றச்சாட்டில் 4 பேரை கல்கிசை பொலிஸார் நேற்றையதினம் (26-10-2023) கைது செய்துள்ளனர்.