புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் யாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி!! அக்காவின் கணவனின் தந்தை வல்லுறவா?

கனடாவில் யாழ் பல்கலைக்கழகத்தில் 2ம் வருடத்தில் கல்வி பயின்று வரும் மாணவி தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த மாணவியை கனடாவில் உள்ள அக்கா கனடாவுக்கு விசிட் விசாவில் எடுத்துள்ளார். அந்த விசாவிற்கான பொறுப்பாளியாக தனது கணவனின் தந்தையை (மாமா) பொன்சர் செய்ய கேட்டுள்ளார். அதன்படி மாமாவும் குறித்த யுவதிக்கு பொன்சர் செய்து விசிட் விசாவில் கடந்த மாதம் கனடாவுக்கு எடுத்துள்ளார். அங்கு மாமாவின் வீட்டிலேயே யுவதி தங்கியிருந்துள்ளார். இந் நிலையிலேயே குறித்த வீட்டில் அதிக அளவான நீரழிவு மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி தொடர்பாக பொலிசார் விசாரணைகைளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த யுவதியுடன் தங்கியிருந்த அக்காவின் கணவரின் தந்தை 63 வயதானவர் என்று தெரியவருகின்றது. மனைவி இறந்த பின்னர் தனித்து வாழ்ந்து வந்தவர் எனவும் குறித்த நபரின் பாலியல் அத்துமீறல்கள் காரணமாக யுவதி தற்கொலை செய்ய முற்பட்டாரா எனவும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.