யாழ் பெரியாஸ்பத்திரிக்கு ஒவ்வொரு வேளையும் வைத்திய நிபுணர் வார்ட் ரவுண்டு வருவார்…..அவர் வரமுதல் ஜனாதிபதி வருவதற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது போல நேர்ஸ் மார் ஏற்பாடு செய்வினம்..
சமூகவலைத்தளத்தி்ல் வந்த தகவலை அப்படியே இங்கு தருகின்றோம்……
யாழ் “போதனா” வைத்திய சாலை (Jaffna Teaching Hospital ) என்பதன் அர்த்தம் பலருக்கு தெரியாது.
ஒவ்வொரு வேளையும் வைத்திய நிபுணர் வார்ட் ரவுண்டு வருவார்
அவர் வரமுதல் ஜனாதிபதி வருவதற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது போல நேர்ஸ் மார் ஏற்பாடு செய்வினம்
அவரச்சுத்தி 5 மாணவராவது வருவினம்
அவர்கள் ஏதோ இவர் பயங்கரவாதி போல பயந்து பயந்து கதைப்பினம் எழுதுவினம் ( ஆசிரியருடன் மாணவர்கள் மனம் திறந்து பேசக்கூடியதாக இருக்கவேணும்)
நோயாளி பேசுவதற்கு வாய்ப்புகள் குறைவு ஏனோ தானோ என்று பார்த்திட்டு அவர் போவார் . கொஞ்சம் விவரமான நோயாளி அல்லது உறவினர் நிண்டா கொஞ்சம் கேள்வி முயற்சி பண்ணலாம்
என்னமருந்து என்ன சாப்பாடு இதெல்லாம் அவர் சொல்லமாட்டார். அவர் ஏதோ சொல்ல இன்னொருத்தர் எழுத அதில் ஒரு சைன வைச்சிட்டு போவார் . (அத கொடுக்கப்போறது நேர்ஸ் அது எப்படி இருக்கும் என்பது நேர்சுக்கு மட்டும் தான தெரியும் ) . சிலநேரம் எங்கட அதிஸ்டத்துக்கு அவரது மனம் இடம் கொடுத்தால் கொஞ்சம் கூடுதலாக நேரம் செலவழித்து பார்ப்பார்.
நேர்சிட்ட நாம கேட்கும்வரை அடுத்தது என்ன நாங்க செய்யவேணும் என்றே தெரியாது
குடும்பத்தில, நண்பர்களாக யாராவது டொக்டர் இருந்தா அவங்கள வைச்சு நமக்கு என்ன நடக்குது எண்டு அறியவாய்ப்பு கிடைக்கும் . மற்றவங்கள் பாவம் அடுத்த ரவுண்டு வரையும், துண்டு வெட்டும் வரையில் நமக்கு என்ன வருத்தம் என்று அறிய வராது
நேர்ஸ் மாரும் டொக்டர் மாரும் வேற வேற டிப்பார்ட்மண்ட் மாதிரி தொழிற் படுவினம்
ஒருவித அதிகாரத்தொனியில்தான் இவர்களது உரையாடல் நடவடிக்கைகள் இருக்கும் .
விடுதியின் நிர்வாகம் உண்மையில் யாருடைய கையில் இருக்கிறது என்பதை கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியாது
மேலே சொன்னது எல்லா வார்டிலும் இல்லை எல்லா வைத்தியர்களுக்கும் நேர்ஸ்களுக்கும் பொருந்தாது . பொருத்தமானவர்கள் தொப்பியை அணியலாம்
வார்ட்டுக்கு ஒரு நோயாளி வந்தால் அவர் போகும்வரை பொறுப்பு வைத்தியர் நேரடி கண்காணிப்பு விசாரிப்பு 3 நேரமும் இருக்கவேண்டும்
குறிப்பாக வழங்கப்படும. ஒவ்வொரு மருந்தும் சிகிச்சையும் விடுதி பொறுப்பு வைத்தியரின் அனுமதி மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருக்கவேண்டும்
முறைப்பாடு கிடைத்தால் தயவு தாட்சண்யம் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்பவேண்டும் .அதற்காக நோயாளியை தாதியர்கள் பழிவாங்குவதை அனுமதிக்கவே கூடாது
ரென்சன் மன அழுத்தம் சோர்வு இருந்தால் வேலையை விட்டு அகற்றுவது நல்லது . தவறிழைத்தால் ஒழுக்காற்று நடவடிக்கை தண்டப்பணம் அறவிடும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும் .
பொதுவாக இது அரச நியமனம் வேலை என்பதால் ஒவ்வொரு தரப்பும் அடங்க மறுக்கின்றனர் மேலை நாடுகளில் உள்ள நடைமுறைகளை இதற்கு அறிமுகப்படுத்தி வைத்திய சேவையின் மகத்துவத்தை காப்பாற்றவேண்டும் . அவர்கள் பெறும் ஊதியம் மக்களின் பணம் என்பதை அவர்கள் மனதில் கொண்டிருக்க வேண்டும் .
தனியார் வைத்திய சாலையில் காட்டும் அன்பை அரச வைத்தியசாலையிலும் காட்டுங்கள்
நோயாளர் பாதுகாப்பு சட்டம் இறுக்கப்பட வேண்டும் தவறுகள் நிர்வாக மட்டத்தில் சமரசம் செய்து கடந்து செல்வது நிறுத்தப்பட்டு பொறுப்பு கூறல் உறுதி செய்யப்படவேண்டும் .கூட்டாக இணந்து தவறுகளை மூட மறைக்க முயற்சிகக்கூடாது
வைசாலிக்கு நீதிகேட்க விவரமான பெற்றோர் இருந்தனர் . அவ்வாறு குரல் இல்லாத நிறைய வைசாலிகள் இருந்தனர் இருக்கின்றனர்
நோயாளர் தரப்பில் நான் கண்டது வைத்தியசாலை என்பதை மறந்து வீடு போல நடந்து கொள்வார்கள் பார்வை நேரத்தில் பட்டியாக உறவினர் வந்து கும்மாங்குத்து போடுவார்கள் இதனை தடைசெய்யவேண்டும் ஒருவர் மட்டும் நோயாளியை பார்க்கும் முறை வேண்டும் . சிறு நோய்களுக்கு பார்வயிட அனுமதிக்கவே தேவையில்லை
யாருக்கும் பயப்படத்தேவை இல்லை வைத்தியர்களோ தாதியர்களோ விண்ணில் இருந்து வந்தவர்கள் அல்லர் திரும்பி அவர்களிடமே சிகிச்சைக்கு வரவேண்டும் என்று பயமின்றி தவறுகளை சுட்டிக்காட்டி உங்களின் இலவச மருத்துவம் பெறும் உரிமையை விட்டுக்கொடுக்காமல் இருங்கள்
மருத்துவமனை நிர்வாகம் அடிக்கடி உள்ளக நிர்வாக பரிசோதனை செய்து தகுதியற்றவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும். கடமை தவறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேணும்
Thangarajah Thavaruban

