புதினங்களின் சங்கமம்

யாழில் வீதியால் செல்பவர்களிடம் கொள்ளையடித்த 2 பல்கலைக்கழக மாணவர்கள் கைது!! ஏன் கொள்ளையடித்தார்கள்? அதிர்ச்சித் தகவல்…

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை வழிப்பறி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். குறித்த இருவரும் சிங்கள மாணவர்கள் என்பதும பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னரே இவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தல்  கற்பவர்கள் என  பொதுமக்கள் அறிந்த பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

May be an image of 2 people, beard, people smiling and motorcycle