புதினங்களின் சங்கமம்

வெளிநாட்டில் மனைவி கள்ளத் தொடர்பு!! திருகோணமலையில் கணவனும் மகளும் ரயிலில் பாய்ந்து மரணம்!! (Photos)

நபரொருவர் தனது மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜஎல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (06) திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தனது மகளுடன் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும்இ 6 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும்இ அங்கு அவர் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்து மனவேதனை அடைந்து தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் மகளை தள்ளிவிட்டு தானும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 1 person and smilingMay be an image of 3 people

No photo description available.May be an image of slow lorisMay be an image of 2 people