புதினங்களின் சங்கமம்

பருத்தித்துறை வீதி கோப்பாயில் மோட்டார் சைக்கிள் மோதி “பட்டு“ மரணம்!!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பருத்தித்துறை- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கோப்பாய் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் தெற்கு பழைய தபாற்கத்தோர் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட நாகராசா இராசபூபதி எனும் 68 வயான பெண்ணை (பட்டு என்று அழைக்கப் படுபவர்) மோட்டார் சைக்கிள் மோதியதில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலீசார் மேற்கொள்ளுகின்றனர்.