புதினங்களின் சங்கமம்

யாழ் ஆனைப்பந்தியில் விபத்தில் சிக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி!!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நுவரெலியாவை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி ஆனைப்பந்தி சந்தியில் மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளும் , பிறிதொரு வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.