கணவர் வெளிநாட்டில்!! யாழில் 29 வயதான ஈழப்பிரியா ரயில் முன் பாய்ந்து இறந்ததுக்கு காரணம் என்ன?(வீடியோ)
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று (5) மதியம் 2.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
அரியாலை, நெடுங்குளத்தை சேர்ந்த திலீபன் ஈழப்பிரியா (27) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாய்த்தார்.
அவருக்கு ஒன்றரை வயதில் பிள்ளை உள்ளது.
கணவனுக்கு அதிக கடன் தொல்லையென்றும், அவர் வெளிநாடு செல்வதற்காக டுபாயில் தங்கி நிற்பதாகவும், கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பெண் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.


புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வம்பன் வீடியோக்களை பார்வையிட இந்த இணைப்பை அழுத்துங்கள்….. எமது சனலை subscrib செய்து தொடர்ந்து வீடியோக்களைப் பார்வையிடுங்கள்..
மேலதிக தகவல்கள் விரைவில்…

