திருமணம் செய்து 5 வருடம்…. 6 முறை பொலிசில் முறையிட்ட மனைவி: நஞ்சுப் போத்தலுடன் பின்னால் சென்ற கணவன்!
புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒருவர் நஞ்சு அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபரின் 25 வயதுடைய மனைவியுடன் சிறிது காலமாக தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளார்.
அதன்போது, இவரும் மனைவியின் பின்னால் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார், மனைவி பொலிஸ் நிலையத்திற்குள் சென்று முறைப்பாடு செய்த போது, தான் மறைத்து வைத்திருந்த நஞ்சுப் போத்தலை எடுத்து அருந்தியுள்ளார்.
உடனடியாக பொலிசார் தலையிட்டு, நஞ்சுப் போத்தலை பறித்து, அந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
பன்விலதன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ஒரு பணியிடத்தில் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இருவருக்கும் இடையில் சில காலமாக தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், மனைவி புபுரஸ்ஸ பொலிஸில் இதற்கு முன்னர் 6 தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
