புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் மனைவியுடன் எரித்துக் கொல்லப்பட்ட சுகந்தன் போதைப் பொருள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து பொம்பிளைக் கள்ளன்!! (வீடியோ)

 வம்பனின் வவுனியா சிறப்பு புலனாய்வு ஊடகவியலாளரின் தொகுப்பு இது….

இலங்கையில் தமிழர்கள் சிலர் யுத்தம் முடிவடைந்த பின்னர் மர்மமான முறையில் கொல்லப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. கொழும்பில் முக்கிய காப்புறுதி நிறுவனத்தின் தலைவரில் இருந்து வவுனியாவில் பிஞ்சுக்குழந்தை மற்றும் மனைவி, கணவன் துாக்கில் தொங்கியதுவரை இன்னமும் பொலிசாரால் துப்புத் துலக்கி கண்டு பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது…. அதனுடன் சேர்ந்து வவுனியா ரவுடி சுகந்தன் மற்றும் மனைவியின் கொலையும் கண்டு பிடிக்க முடியாத மர்மங்களாகவே காணப்படப் போகின்றது.

முழுமையான விவரங்கள்
?இந்த சம்பவம் நடைபெற்ற இடம் வவுனியா தோனிக்கல். நடைபெற்ற வீட்டின் உரிமையாளர் சுரேஷ் என்கின்ற டெலோ இயக்கத்தின் முக்கியஸ்தராவர். (ஏற்கனவே ரொலோ செல்வம் அடைக்கலநாதனும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியாக இருந்தவர்)  இவர் எரித்துக் கொள்ளப்பட்ட பாத்திமா என்கின்ற பெண்ணின் சகோதரரும் ஆவார்.
?பாத்திமாவும் அவரது கணவர் சுகந்தனும் வவுனியா ஓமந்தையில் வசித்து வந்தவர்கள் ஐந்து நாட்களுக்கு முன்னர் அதாவது 19ஆம் தேதி பாத்திமாவின் அண்ணன் சுரேஷ் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார்கள்.
?பாத்திமாவின் அண்ணன் சுரேஷின் மகளின் 19 வது பிறந்த தினம் 23ஆம் தேதி என்பதால் சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டு இருந்தார்கள் இதற்காகவே தங்கி இருந்தார்கள்.
?இந்த நிலையில் 23ஆம் தேதி அதிகாலை வீட்டிற்கு வந்த 11 பேர் கொண்ட மர்ம கும்பலால் மிகக் கொடூரமாக வெட்டி ஒயில் கலந்த பெட்ரோல் ஊத்தி எரிக்கப்பட்டார்கள்.
?இதன் பின்னணி என்ன போலீசாரின் விசாரணை எந்த கோணத்தில் போகின்றது என்பதை விவரமாக பார்க்கலாம்.
?சுகந்தன் பாத்திமாவின் கணவர் இவரின் வயது 27 (34 என்றும் கூறப்படுகிறது).
?பாத்திமாவின் வயது 21 சுகந்தன் பாத்திமாவை திருமணம் செய்வதற்கு முன்னர் வேறு ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
?அந்த நிலையில் ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேக குற்றவாளியாக சுகந்தன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்படும் போது அவருடன் வாழ்ந்து வந்த பெண் வேறுவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
?இதனால் சுகந்தனுக்கும் அந்த பெண்ணின் புதிய கணவருக்கும் இடையில் கடும் பகை இருந்து வந்துள்ளது. இந்தப் பகையும் இந்த கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? என்று போலீசார் விசாரணை செய்கிறார்கள்.
?மற்றது சுகந்தன் தனது மனைவி பாத்திமாவின் அண்ணன் சுரேஷின் போதை வஸ்து தொழிலில் அவருடன் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த கோணத்திலும் போதை வஸ்து பணம் கொடுக்கல் வாங்கல் இந்த கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? என்றும் விசாரணை நடக்கிறது.
? மற்றும் ஆட்கடத்தல் செய்து வந்து பணம் பறிக்கும் செயல்பாட்டிலும் சுகந்தன் அவரது மனைவியின் அண்ணன் சுரேஷ் மற்றும் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவர் ஈடுபட்டு வந்ததாக மற்றும் ஒரு தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. இந்த ஆட்கடத்தல் செயல்பாட்டினாலும் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
?பாத்திமா குடும்பம் ஒரு மதம் மாறிய குடும்பத்தினர் . 21 வயசு இளம்பெண்.
?அன்று இரவு என்ன நடந்தது?
23 ஆம் திகதி அதிகாலை 12 மணியளவில் வெளியே கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது.. அன்று பிறந்த தினம் என்பதால் வெளிநாட்டில் இருந்து பரிசு பொருட்கள் அனுப்பி இருப்பார்கள் சப்ஸ்ரைஸாக என நினைத்து பாத்திமாவின் அண்ணன் சுரேஷ் வெளியே சென்று கேட்டை திறந்து உள்ளார்.
?உடனே வெளியே பதுங்கி இருந்த 11 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் சுரேசை வாளால் வெட்டி இருக்கின்றனர். வெட்டுக்காயங்களுடன் வீட்டின் உள்ளே ஓடிய சுரேஷ் சத்தம் போட்டவாறு வீட்டுக்குள் சென்று பதுங்கி உள்ளார்.
?அவரை விரட்டி வந்த கும்பல் வீட்டுக்குள் சென்றுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த கும்பல் சுகந்தனை வெளியே வருமாறு கூறியிருக்கின்றார்கள்.வீட்டின் உள்ளே ஹால் பகுதியில் நின்ற பாத்திமா மற்றும் சுரேஷின் குடும்பத்தார் சிறுவர்கள் என எல்லோரும் பதறி அடித்து சத்தம் போட வாள்வெட்டுக்காரர்கள் குழந்தைகள் என்றும் பார்க்காமல் எல்லாரையும் காயப்படுத்தி இருக்கின்றார்கள்.
?அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மேல் மாடியில் இருந்த சுகந்தன் கீழே இறங்கி வந்திருக்கிறார். அப்போது சுகந்தனை வாளால் வெட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளும் போது பாத்திமா தடுக்க முற்பட்டு இருக்கின்றார். அப்போது பாத்திமாவையும் கடுமையாக வெட்டி வீழ்த்தி இருக்கின்றார்கள். பாத்திமாவை வீழ்த்தியகையோடு சுகந்தனை வெட்ட முற்படும் போது அவர் திரும்ப மேல் நோக்கி ஓடி இருக்கிறார்.
?இந்த நிலையில் வீட்டில் உள்ளே எல்லா இடங்களிலும் ஒயில் கலந்த பெட்ரோல் ஊற்றியுள்ளார்கள். ஒயில் ஏன் கலக்கிறார்கள் என்று சொன்னால் ஒயில் உடம்பில் ஒட்டு பட்டு இருக்கும் தீக்காயம் நின்று பிடித்து எரியும் என்பதால் ஒயில் கலந்த பெட்ரோலை பாத்திமா மீதும் வீட்டுக்கு உள்ளே கதவுகளை எல்லாம் சுத்தியும் ஊற்றி நெருப்பு வைத்திருக்கிறார்கள்.
?அஸ்மா நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பாத்திமா தீக்காயம் உட்பட கடும் புகையால் அவதிப்பட்டு கத்தவே மேலே ஓடிய சுகந்தன் திரும்பவும் கீழே மனைவியை காப்பாற்ற ஓடி வந்திருக்கிறார்.
?அவர் ஓடி வரும்போது தரையில் கொட்டப்பட்டிருந்த ஒயில் கலந்த பெட்ரோல் வழுக்கி அவரும் எரிந்து கொண்டிருந்த தீக்குள் சென்று விழுந்துள்ளார்.
?பாத்திமாவின் உயிர் அவரின் கண் முன்னே பிரிந்துவிட அவர் சத்தம் போட்டவாறு வீட்டின் வெளியே வந்து தரையில் விழுந்துள்ளார். இந்த நிலையில் அயலவர்கள் வீட்டுக்கு வந்து எரிந்து கொண்டிருந்த சுகந்தன் மீதான தீயை அணைத்து காவல்துறையினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்து தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட அனைவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
?வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சுகந்தனிடம் வவுனியா போலீசார் வாக்குமூலம் பெற்றிருக்கின்றார்கள்.
?வாக்குமூலம் பெற்ற பின்னர் வெளிநாட்டில் இருக்கின்ற சுகந்தனின் உறவினர்களின் குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சுகந்தன் மாற்றப்பட்டார்.
அவர் 26 ம் திகதி சிகிச்சை பயனின்றி மரணம் அடைந்தார்.
?ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பாத்திமாவின் அண்ணன் சுரேஷ் அங்கிருந்து கடும் காயங்கள் இருந்தபோதிலும் உடனடியாக வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த ஒரு பொதியை எடுத்து கொண்டு சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
?அந்தப் பொதி என்ன என்று போலீசார் இப்போது விசாரித்து வருகின்றார்கள். அது பெரும்பாலும் போதைவஸ்து தொடர்புடையதாக இருக்கலாம். அந்த போதை வஸ்துக்காகவே இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.
?சுகந்தன் 27 வயது மரணம்
பாத்திமா 21 வயது மரணம்
?மற்றும்
2 வயது சிறுவன்
7,8,13 வயது சிறுமிகள்
19 வயது பெண்
41 வயதிற்கு உட்பட்ட 3 பெண்கள்
36 வயது ஆண்
42 வயது சுரேஷ் ( வீட்டு உரிமையாளரும்
பாத்திமாவின் அண்ணணும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும்.
?ஆகியோர்கள் தீயில் சிக்கி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்
?இந்த குற்றச்செயல்களுக்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.  இந்த செயலானது காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி செல்வாக்கான நபர் ஒருவரின் உத்தரவின் பேரில் இடம் பெற்றதாகவே அறியப்படுகிறது.
?கடந் சில மாதங்களுக்கு முன்னர் வவுனியாவில் இதே போன்ற ஒரு குடும்பம் சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்து சென்றவர்களின் பின்னர் கணவர் தூக்கில் தொங்கிய படியும் மனைவி குழந்தைகள் இறந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கிலும் பிரபல மருந்து விநியோகஸ்த நிறுவனம் பின்புலத்தில் இருந்ததால் இதுவரை எந்த ஒரு நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
?பல கோடிகள் இந்த போதை வஸ்தால் கைகளில் பயன்படுவதால் அதிகார வர்க்கம் இந்த மாதிரி கொலைச் சம்பவங்களுக்கு விலை போய் விடுகிறார்கள்.

ஒருவனைக் கடத்தி சுகந்தன் செய்யும் கட்டப்பஞ்சாயத்துக் காட்சிகள் கீழே தரப்பட்டுள்ளன.