Home புதினங்களின் சங்கமம் மாணவர்கள் மீது பாலியல் அத்துமீறல் செய்பவர்களுக்கு அதி உச்ச தண்டனை!! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!!

மாணவர்கள் மீது பாலியல் அத்துமீறல் செய்பவர்களுக்கு அதி உச்ச தண்டனை!! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!!

வடமாகாணத்தில் மாணவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தில் உள்ள உச்ச பட்ச தண்டனை வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மீளும் ஆளுமை அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அலவர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது ஆசிரியர்கள் முன்வரிசையில் இருப்பதை தவிர்த்து மாணவர்கள் முன்வரிசையில் இருக்க வேண்டும் எனவும் பணித்துள்ளார் இவ்விடயத்தை வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.