புதினங்களின் சங்கமம்

யாழில் அக்கா சட்டை அணிந்ததால் சண்டை!! சுண்டுக்குழி மகளீர் கல்லுாரி மாணவி தீயில் எரிந்து மரணம்!!

தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது – 19) என்ற சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று (16) உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். அக்காவின் ஆடையை அணிந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின் பின்னரே குறித்த யுவதி தீயில் எரிந்து மரணமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.