களுவாஞ்சிக்குடியில் பவகுனராசாவை எதற்காக வெட்டிக் கொலை செய்தாள் மகள்?
குடிபோதையில் தந்தை தரும் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல், தந்தையை மகளொருவர் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுதாவளையை வசிப்பிடமாகக் கொண்ட க.பவகுணராசா (61) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மகளின் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) காலை உயிரிழந்துள்ளார்.
இவரைத் தாக்கிய மகள் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
