புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் சென்ற அரச – தனியார் பஸ்களின் திருவிளையாடல் இதோ!! (வீடியோ)

தனியார் பேருந்து யாழில் இருந்து மாலை 04.45 க்கு பயணத்தை ஆரம்பித்த அதேநேரம் அரச பேருந்து 05:30க்கு பயணத்தை ஆரம்பித்திருந்தது.
அதைப்பற்றி ஒன்றும் இல்லை.
பூநகரி தாண்டியதும் முற்கொம்பன் என்ற இடத்தில் வைத்து தனியார் அரச பேருந்து தனியார் பேருந்தை முந்திய கணத்தில் இருந்து இரண்டு பேருந்துகளுக்குமான போட்டி ஆரம்பம் ஆனது.
நீங்கள் காணொளியில் காணக்கூடிய இந்த வேகமும் போட்டியும் சிறிய தூரத்துக்கானது அல்ல நான் பல்லவராயன்கட்டு சந்தியில் இறங்கினேன். என் கணிப்பு சரியெனில் தள்ளாடி வரை இதே வேகமும் போட்டியும் தொடரும்.
நான் சொல்ல வந்த விடயம், முற்கொம்பன் – பல்லவராயன் கட்டு சந்திக்கு இடைப்பட்ட தூரத்திற்கான இவர்களது போட்டியில் ஏற்றாமல் விடப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 15 க்கு குறையாமல் இருக்கும்.
இந்த இரண்டு பேருந்துகளால் பயணிகள் ஏற்றப்படாமல் தவிர்க்கபடும் போது நேரம் மாலை 06:00 மணி தாண்டிவிட்டது.
A32 பாதையூடாக நீங்கள் பயணித்திருப்பின் அவதானித்திருப்பீரகள். முற்கொம்பனில் இருந்து முழங்காவில் வரை இரண்டு பக்கமும் காடு சூழ்ந்த பகுதி.
பேருந்து ஓட்டினர்கள் மற்றும் நடத்துனர்களின் பணிப்பிழையின் காரணமாக ஏற்றாமல் விடப்பட்ட பயணிகளின் அசளகரியங்களுக்கும் அவர்களது பாதுகாப்புக்கும் யார் பொறுப்பு?
இந்த பேருந்துகளின் சாரதிகளும் நடத்துனரகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
பதிவு – thevatharsan sukinthan