வடக்கு மாகாண ஆளுநரை கோமாளியாக மாற்றியுள்ள ஆவா குழு!! (Photos)
இராணுவ புலனாய்வினால் சூட்சுமமாக வழி நடாத்தப்பட்டு வரும் ஆவா குழு என்ற போர்வையில் ரவுடிகளின் குழு வடக்கு மாகாண ஆளுநரை கோமாளியாக்கியுள்ளது. குறித்த குழு இராணுவத்தின் பின்னணியில் இயங்கி வருகின்றது என்பதுடன் கஞ்சா மற்றும் பயங்கர போதைப்பொருட்கள், களவுகளை அரங்கேற்றி வருவதையும் அறிந்திருந்த வடமாகாண ஆளுநர் சுரேன்ராகவன் அந்தக் குழுவை விடுதலைப்புலிகளின் நிலைக்கு கொண்டு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லப்போகின்றேன் எனவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி செல்வேன் எனவும் சினிமா கதாநாயகர்களின் வசனங்களை திரைப்படங்களில் பார்த்து தானும் அதைப் போல் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தார். அவருக்கு குறித்த ஆவா குழு ரவுடிகள் ஆப்பு இறுக்கியுள்ளனர்.
தாம் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் என ஆவா குழு வெளியிட்டுள்ள அறிக்கை இது. பேய்க்கு பேன் பார்த்த ஆளுநரால் வந்த நிலை இது என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.