புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் காரில் பயணித்தவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு – ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கார் சாரதியே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவர் கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது