வவுனியாவில் STF வாகனம் மோதி முதியவர் வைத்தியசாலையில்!(Photos)
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (18.06.2019) மதியம் 11.30மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புகையிரத நிலைய வீதியில் இலங்கை வங்கி அருகே தரித்து நின்ற விசேட அதிரடிப்படையினரின் வாகனம் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான முதியவர் காயமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸார் சமூகமளிக்க முன்னர் விசேட அதிரடிப்படையினர் விபத்துக்குள்ளான அவர்களது வாகனத்திற்கு எடுத்துக்கொண்டு அவ்விடத்தினை விட்டு சென்றனர்.