புதினங்களின் சங்கமம்

கொழும்பில் வைத்து இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (06) உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.