அம்மன் கோவில் கும்பாபிசேகத்தில் சங்கிலி அறுத்த 6 கள்ளிகள் இவள்கள்தான்!! (Photos)
முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தின்போது பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த ஆறு பெண்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு நாவலப்பிட்டி கடுங்கஞ்சேன பகுதியில் நடந்துள்ளது.
குறித்த ஆலயத்தில், கும்பாபிஷேகத்திற்கான விஷேட பூஜைகள் இடம்பெற்று கொண்டிருந்தது, பக்தர்களின் நெரிசலும் அதிகமாகவிருந்தது.
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி உட்புகுந்த சந்தேகத்திற்கு இடமான ஆறு பெண்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை போல் நடித்து, வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏனைய பெண்ணுடைய தங்க சங்கிலியை அறுத்துள்ளனர்.
பெண் கூச்சலிட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதோடு, அறுக்கபட்ட தங்க சங்கிலியையும் நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மொத்தம் 06 பெண்கள் கைது செய்யபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்கள் அறுவரும் ஆலயங்களில் இடம்பெறுகின்ற விஷேட பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகங்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்கு குழுவாகச் சென்று பக்த அடியாரிகளின் தங்க சங்கிலிகளை களவாடும் சம்பவத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் வாழைச்சேனை, புத்தளம், ஆலாவத்த, வத்தேகம ஆகிய பகுதிகளைச் சேர்நத 23 தொடக்கம் 28 வரையான வயது மதிக்கத் தக்கவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
திருட்டுச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.