புதினங்களின் சங்கமம்

யாழ் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்! ஏற்கனவே வேறு ஆசிரியர்களுக்கும் அடித்தவராம்!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது இன்றைய தினம் புதன்கிழமை பாடசாலை மாணவன் தாக்குதல் நடத்தியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக தொடர்ச்சியான ஆசிரியர் மீதான தாக்குதல்கள் ஆசிரியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த மாணவனும் திரைப்படம் ஒன்றில் வரும் காட்சியில் கற்பழிப்பு பஞ்சாயத்து வழக்கு ஒன்றில் பல கற்பழிப்புக்களை தவணை முறையில் செய்து வந்த மைனர் குஞ்சுமணியின் மகனாக இருக்க வாய்ப்புள்ளது….