ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூடு : இளம் குடும்பஸ்தர் பலி!!
ஹம்பாந்தோட்டை – சுச்சி கிராமத்தில் நேற்று (22) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹக்மான கொடிதுவாக்குகே சாகர என்ற 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிணையில் வந்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

