பல திருவிளையாடல்கள் செய்த பிரதீபா நிசாந்தி என்ற இந்த யுவதியை கண்டால் உடனே பொலிசாரிடம் ஒப்படையுங்கள்!! (Photos)
கடந்த மூன்றாம் மாதம் தலங்கம பொலிஸ் நிலையத்தில் வைத்து பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்து தலைமறைவான குற்றத்தில் பெண்ணொருவர் தேடப்பட்டு வருகிறார்.
பிரதீபா நிஷாந்தி என அறியப்படும் இந்த பெண் மஹபுத்கமுவ , அங்கொடை என்ற முகவரியை சேர்ந்தவர். தற்போது அங்கிருந்து வெளியேறி தலைமறைவாகி உள்ளார்.
எனவே இவர் குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு வேண்டப் படுகின்றனர்.
இவரை பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள் 071 – 8591649,011 – 2789249 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.