சுவிஸ் அன்ரியுடன் கள்ளத் தொடர்பு என கூறி யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!!
சுவிஸ்லாந்திலிருந்து வந்த 46 வயதான குடும்பப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவன் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கந்தர்மடம் பகுதியில் உள்ள சுவிஸ்லாந்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் தங்கி கற்று வந்துள்ளார். குறித்த வீட்டில் சுவிஸ்லாந்தில் வசிக்கும் குடும்பப் பெண்ணின் கணவரின் உறவுக்காரர்களான வயோதிப தம்பதிகளும் வசித்துள்ளார்கள். இந் நிலையில் கடந்த மாத தொடக்கத்தில் 46 வயதான அந்த வீட்டுச் சொந்தக்காரியான குடும்பப் பெண் சுவிஸ்லாந்திலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். அவர் சுவிஸ்லாந்திலிருந்து வரும் போது கணவருடன் முரண்பட்ட பின்னரே இங்கு வந்துள்ளார். தனது வீட்டில் வாழ்ந்து வந்த கணவரின் நெருங்கிய உறவுகளான வயோதிபத் தம்பதிகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி வந்துள்ளார். இருப்பினும் கணவரின் ஆதரவு இருந்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை. இதனையடுத்து அங்கு தங்கி கற்று வந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவனைக் கொண்டு அந்த தம்பதிகளை அச்சுறுத்தி வெளியேற்றியதாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவனும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து வீட்டை முழுவதுமாக ஆக்கிரமித்து வயோதிபத் தம்பதிகளை நித்திரை கொள்ளவிடாது தொல்லைப்படுத்தியே அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளார்கள். இதனையடுத்து கடந்த வெசாக் தினத்தன்று நள்ளிரவு கணவரின் உறவுகள் சிலர் வீட்டை முற்றுகையிட்டு தனித்திருந்த பல்கலைக்கழக மாணவனை தாக்கியுள்ளார்கள். மாணவன் தாக்கப்பட்ட போது மாணவன் தனது அறையில் இல்லாத நிலையில் குறித்த சுவிஸ் குடும்பப் பெண்ணுடன் அறைகுறை ஆடையில் இன்னொரு அறைக்குள் இருந்ததாகவும் இவற்றை எல்லாம் வீடியோவாக தாக்கியவர்கள் பதிவு செய்து கொண்டே தாக்கியதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். மாணவன் தாக்கப்பட்டதுடன் அவனது உடமைகளும் ஒழுங்கைக்குள் வீசி எறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நடைபெற்ற பின்ன மாணவனை அங்கு காணவில்லை எனவும் குடும்பப் பெண்ணே அங்கு தனித்துள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடுகள் எவற்றையும் சுவிஸ்லாந்திலிருந்து வந்த பெண் செய்யவில்லை என தெரியவருகின்றது.
