புதினங்களின் சங்கமம்

யாழ் நகரில் ஹாட்வெயர் கடை உரிமையாளரின் மனைவி தற்கொலை முயற்சி!! வர்த்தகரின் கள்ளத் தொடர்பே காரணமாம்!!

யாழ் நகரில் உள்ள ஹாட்வெயர் கடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி தற்கொலைக்கு முயன்று அயலவர்களால் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். ஹாட்வெயர் கடை உரிமையாளர் கடந்த சனிக்கிழமை மாலையில் தனது வாகனத்தில் இளம் பெண்ணொருவருடன் செல்லும் போது தென்மராட்சிப் பகுதியில் மது போதையில் பொலிசாரால் பிடிக்கப்பட்டுள்ளார். அவரும் அவருடன் சென்ற யுவதியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கணவர் மது போதையில் பொலிசாரிடம் பிடிபட்ட தகவல் கிடைத்தவுடன் மனைவி தனது உறவுக்காரர்களுடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு அவரை பிணையில் எடுக்க முற்பட்ட போதே மனைவி வர்த்தகருடன் சண்டை பிடித்துள்ளார். குறித்த இளம்பெண் யார்? எதற்காக பளைப் பகுதிக்கு சென்றீர்கள்? என மனைவி கேட்டு சண்டை பிடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் இளம்பெண்ணையும் கேள்வி கேட்டு அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து பொலிசார் மனைவி உட்பட்டவர்களை அங்கிருந்து அகற்றியதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னரும் குறித்த இளம்பெண் தொடர்பாக கடந்த இரு நாட்களாக வர்த்தகரின் வீட்டில் சண்டை நடந்துள்ளது.  அந்த இளம் பெண் யாழ் நகரப்பகுதியில் உள்ள பான்சி கடை ஒன்றில் வேலை புரிவதாக அறிந்து  நேற்று முன்தினம் மாலை மனைவி மற்றும் மனைவியின் தம்பிகள் இருவர் அந்தக் கடை  முதலாளி வீட்டுக்குச் சென்று கடும் சண்டையிட்டதாகத் தெரியவருகின்றது. கணவனின் நண்பனான பான்சி கடை முதலாளியே தனது கணவனுக்கு குறித்த பெண்ணை தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறியே மனைவி சண்டை பிடித்துள்ளார். இதன் காரணமாக பான்சி கடை முதலாளி பொலிசாருக்கு முறையிடச் சென்றதாகத் தெரியவருகின்றது.

அதன் பின்னரே நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வர்த்தகரின் மனைவி கிணற்றுக் கப்பியில் இருந்த கயிற்றை தனது கழுத்தில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்ததாகத் தெரியவருகின்றது. இதனை மேல்மாடியில் இருந்து அவதானித்த அயல்வீட்டு பெண் உடனடியாக அயலவர்களுக்கு தெரிவித்து அங்கு சென்றுள்ளார். தெய்வாதீனமாக குதிக்கும் போது கப்பியிலிருந்த கயிறு முழுவதும் கிணற்று தண்ணீர் வரை சென்றதால் கழுத்து இறுகாது கிணற்றில் வீழ்ந்து தத்தளித்துள்ளார் மனைவி. இதன் பின்னர் காயங்கள் ஏதுமின்றி அயலவர்களால் மனைவி மீட்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. அத்துடன் மனைவியின் வேண்டுகோளின் பெயரில் அயலவர்கள் மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் நகரப்பகுதி வர்த்தகர்கள் சிலரின் பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது அவர்களின் மனைவிகள் மட்டுமல்ல…..