புதினங்களின் சங்கமம்

இரவில் தினமும் குடித்துவிட்டு பெண் டொக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்?

வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு ஆபாசமான காணொளிகள் மற்றும் படங்களை அனுப்பிய 47 வயதுடைய திருமணமான காணி தரகர் ஒருவர் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு நபர் வட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்புவதாக காவல்நிலையத்தில் வைத்தியர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

வெலிவேரியவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திருமணமான சந்தேக நபர் தினமும் இரவில் மது அருந்திவிட்டு பெண் வைத்தியருக்கு ஆபாச வீடியோ அழைப்புகளை செய்யும் பழக்கம் உள்ளவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, ஏனைய பெண்களுக்கும் வீடியோ அழைப்புகளை மேற்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.