புதினங்களின் சங்கமம்

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்; இருவர் படுகாயம்.!

இன்று (02) மாலை 2.00 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு குழந்தை யேசுகோவில் பகுதி வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்வதுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.00 மணியவில் புதுக்குடியிருப்பு குழந்தை யேசுகோவில் பகுதி வீதியில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் விபத்து இடம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த 36 அகவையுடைய புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவை சேர்ந்த கி.ஜெமில்ராஜ் என்பவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய இருவரும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவாக் இவர்கள் 21 மற்றும் 22 அகவையுடையவர்கள் என தெரியவந்துள்ளதுடன் இவர்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.