வற்புறுத்தி ராஜினமா!! உரிமைகள் பறிப்பு!! பழிவாங்கப்படும் மகன்!! யாழ் சென்ஜோன்ஸ் கல்லுாரியின் முன்னாள் ஆசிரியரின் மனக்குமுறல்!!
சென்ஜோன்ஸ் கல்லுாரியின் ஆசிரியராக இருந்த கிறிஸ்டி பரராஜசிங்கம் என்பவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு நாம் தந்துள்ளோம்…..
அன்புள்ள உள்ளங்களே
எனக்கு நிகழ்ந்ததை நிகழ்வதை உங்களுக்கு தெரியப்படுத்துவதும் சில கசப்பான சம்பவங்கள் St. John’s College இல் இனி வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதும் தான் இந்த கடிதத்தின் நோக்கம்.
இந்தக் கடிதம் பின்வரும் விடயங்களை பற்றியது:
• தற்போதைய அதிபருடன் எனது கடந்தகால உறவு
• No Pay Leave க்கான நியாயமற்ற சட்டவிரோதமான நிபந்தனைகள்
• எனது ராஜினாமாவுக்கான காரணம்
• பழிவாங்கல் நடவடிக்கைகள்
• இனி வருங்காலங்களில் நான் செய்ய போகின்றவை
• St. John’s சமூகத்திடம் முன்கூட்டியே மன்னிப்புக் கோரல்
நான் அக்டோபர் 2003 இல் சென் ஜோன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகச் இணைந்தேன். ஆங்கில மொழி நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் கல்லூரி வெளியீடுகளின் ஆசிரியராகவும் இருந்ததைத் தவிர வேறு பல பொறுப்புகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆசிரியர் பயிற்றுவிப்பாளராகவும் இருந்தேன். மற்றும் பல வெளிநாட்டுப் பாடசாலைகளுடன் இணைந்து சில செயற்பாடுகளை எமது ஆங்கில ஆசிரியர்களுடன் செய்து சென் ஜோண்ஸ் கல்லூரிக்கு ‘சர்வதேச பாடசாலை விருதை’ பிரிட்டிஷ் கவுன்சிலிடம் இருந்து பெற்றுக் கொடுத்தேன்.
கல்லூரியின் தற்போதைய அதிபருடன் எனது கடந்த கால உறவு
இக்காலத்தில் திரு.வி.எஸ்.பி.துசீதரன் என்னுடன் முரண்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. நினைவில் இருக்கும் ஒரு சிலவற்றை மட்டும் கீழே குறிப்பிடுகிறேன்.
1) கடந்த கால அதிபர் Magazine Articles / Prefects’ Guild Report / Newsletters போன்றவற்றை சமர்ப்பிக்குமாறு துஷி sir க்கு பல நினைவூட்டல்களை என் மூலம் அனுப்பிய பின்னரே எமது உறவு மோசமடையத் தொடங்கியது.
ஒரு முறை ஏழாவது நினைவூட்டலையும் அனுப்ப நேரிட்டது. துஷி சார் அப்போதைய அதிபரை எதிர்கொள்ள முடியாது என் மீது தனது கோபத்தை காட்டினார். நினைவூட்டல் பட்டியலில் தனது பெயரைச் சேர்த்ததற்காக அவர் பலமுறை என்னைத் திட்டி இருக்கிறார்.
2)தவணை பரீட்சை ஒன்றின் பின்னர் ஒரு மாணவரின் Progress Card இல் எனது Remarks ஐ எழுதினேன். மாணவனின் கையில் Progress Card கொடுக்கப்பட்டது. எனது Remarks வெட்டப்பட்டிருந்தது. துஷி சார் தான் வெட்டியுள்ளார் என்று அறிந்ததும் மாணவனுடன் அவரை சந்திக்க சென்றேன். ஏன் வெட்டி இருக்கிறார் என்று நான் கேட்டதற்கு அந்த ஆங்கில வசனம் இலக்கண ரீதியாக தவறானது என்றார். அந்த வசனத்தில் எந்த தவறும் இல்லை என்று நான் நிரூபித்தேன். மாணவனின் முன்னிலையில் அவர் வெட்டி திருத்தியதை நான் வெட்டிவிட்டு நான் முதல் எழுதிய Remarks ஐ மறுபடியும் எழுதி மாணவனின் கையில் Progress Card ஐ ஒப்படைத்தேன். இது அவருக்கு பெரும் அவமானமாக போனது.
3)பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய English APTIS பரீட்சையில் நான் 198/200 மதிப்பெண்களைப் பெற்ற பின்னர் மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலால் ஒரு முதன்மை பயிற்றுவிப்பாளராக – ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க என்னைத் தேர்ந்தெடுத்தனர். Rev.N.J.Gnanaponrajah அவர்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்.
ஆனால்இ துஷி சார் Principal Designate ஆன பிறகுஇ என்னை அனுப்ப மறுத்தார். ஆங்கிலத்திற்கான A.D.E மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் முகாமையாளர் அவரின் முடிவை மாற்றுமாறு அழுத்தம் கொடுத்தனர். இறுதியில் அவர் விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.
4) ஒவ்வொரு மாணவருக்கும் சாரணர் சேகரிப்பு அட்டை வழங்கப்பட்டது. எனது மகன் மைதானத்தில் இருந்து திரும்பியபோது அவரது மேசையினுள் அவரது அட்டை இருக்கவில்லை. அவர் உடனடியாக Sectional Head க்கு தெரியப்படுத்தினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு திடீரென தொலைந்த அட்டைக்கு பதிலாக 20,000/= செலுத்துமாறு எங்களிடம் கேட்கப்பட்டது.
பாடசாலைக்கு வரும் மாணவனிடம் 100/= க்கு மேல் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தும் அதே நிர்வாகம் 20,000/= பெறுமதியான அட்டையை பொறுப்பு கொடுத்தது சரியா என்று நான் நிர்வாகத்திடம் கேட்டேன். Rev.Gnanaponrajah எனது கருத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் துஷி சாரோ நான் 20,000 ரூபாவை எனது கையால் போட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
என்ன செய்வது என்று அறியாமல் எமது பழைய அதிபர் தனது சொந்த பணத்தை செலுத்தி கணக்கை முடித்தார். இந்த செயல் கூட துஷி சாரின் மனதை உருக்கவில்லை. தான் நியாயமாக நடக்கவில்லை என்பதையும் உணரவைக்கவில்லை. அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு எமது கணக்காளரிடம் அதிபரின் பணம் திருப்பி அவரிடமே கொடுக்கப்பட்டுவிட்டதா என்று கேட்டேன். இல்லை என்றார்.
அந்தப் பணத்தை அவர் கொடுப்பது நியாயமற்றது. நான் கொடுப்பதும் நியாயமற்றது. ஆனால் அவர் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்த எனது 20,000/= ஐ நான் செலுத்தினேன்.
5) நான் ஆங்கில நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். மாணவர்களுக்கு விவாதப் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடுகள் செய்தேன். கொழும்பில் ஆறு நாட்கள் நடைபெறும் ஒரு முக்கியமான விவாதப் போட்டிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஒருங்கிணைப்பாளராக ஒரு ஆசிரியரை அனுப்ப நான் செயல்பட்டேன். துஷி சார் என்னை பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போகுமாறு சொன்னார். 18 வயதுக்கு உட்பட்ட 2 பிள்ளைகள், சுமார் 75 வயதான எனது தாயார் மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது மாற்றுத் திறனாளி சகோதரர் எனது பராமரிப்பின் கீழ் இருப்பதால் என்னால் வீட்டை விட்டு பிற இடங்களுக்கு செல்வது கடினம் என்று நான் அவருக்கு எடுத்து கூறினேன். அவர் போகும் படி கட்டாயப்படுத்தினார்.
மூன்று நாட்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று கொழும்பில் இருக்கின்றேன் – அடுத்த மூன்று நாட்களுக்கு வேறு யாரையாவது அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். அதையும் அவர் மறுத்தார். ஆறு நாட்களும் நானே மாணவர்களுடன் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். துஷி சார் சமரசம் செய்து கொள்ள விரும்பாததால்இ எனது பிரச்சினையை அருட்தந்தை ஞானபொண்ராஜாவிடம் கூறினேன். எனது பிரச்சனையை உடனடியாக விளங்கிக்கொண்ட அவர் மாணவர்களை அழைத்துச் செல்ல வேறு ஒருவரை இனங்காணுமாறு துஷி சாரிடம் கூறினார். தான் தோற்றுவிட்டதாக எண்ணிய துஷி சார் இறுதியில் மாணவர்களை விவாதத்திற்கு அனுப்பவே இல்லை. மாணவரின் நலனை விட அவரது Ego க்கே அவர் முக்கியத்துவம் கொடுத்தார். இவ்வாறான பல சிறுபிள்ளை தனமான பழிவாங்கும் முயற்சியில் துஷி சார் ஈடுபட்டிருந்தார்.
No Pay Leave க்கான நியாயமற்ற மற்றும் சட்டவிரோத கோரிக்கைகள்
துஷி சார் தான் பாடசாலையின் அடுத்த அதிபர் எனும் நிலை அறிந்து நான் சற்று ஒதுங்க விரும்பினேன். எனவே 25.11.2019 அன்றுஇ நான் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறி இரண்டு ஆண்டுகளுக்கு ஊதியமில்லா விடுமுறை வேண்டும் என்று கேட்டேன். அது மறுக்கப்பட்டது. (நான் விரும்பி இருந்தால் நான் ஒரு மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து Medical Leave இல் நின்று இருக்கலாம். ஆனால் நான் அப்படி செய்ய விரும்பவில்லை.)
பதில் அதிபர் அருட்தந்தை சாம் பொன்னையா, திரு.துசீதரன் மற்றும் உப அதிபர் திரு.ஞானராஜன் ஆகியோரின் சந்திப்பின் போது உரையாற்றுகையில் அருட்தந்தை சாம் பொன்னையா என்னை இழக்க விரும்பவில்லை என்று கூறினார். எனக்கு ஒரு வருடம் No Pay Leave வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். நான் அதற்கு சம்மதித்தேன். அதற்கு துஷி சார் பின்வரும் நிபந்தனைகளை முன் வைத்தார்:
2) எனது சம்பளம் ஒரு ஆண்டு காலத்திற்கு நிறுத்தப்படும்.
3) எனக்கு மாற்றாக வரும் ஆசிரியரின் சம்பளத்தை நான் எனது கையால் கொடுக்க வேண்டும்.
4) எனக்கு மாற்றாக வரும் ஆசிரியர் ஒரு பட்டதாரியாக இருக்கப்போவதால் நான் பெற்ற சம்பளத்தை விட ஏறக்குறைய 5000/= கூடுதலாக எனது கையால் கொடுக்க வேண்டும்.மனம் நொறுங்குண்ட நிலையில் தயக்கத்துடன் St John’s இல் தொடர்ந்தும் பணியாற்ற நான் விரும்புவதால் இந்த 4 நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன் என்று கூறினேன்.ஐந்தாவது நிபந்தனையாக துஷி சார் ஐந்து லட்சம் ரூபாவை தனக்கு அன்றே தர வேண்டும் என்று கூறினார். இது ஒரு Non Refundable Deposit என்றும் இதில் இருந்தே எனக்கு பதிலாக வரும் ஆசிரியருக்கு சமபலம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இவை ஒரு ஊழியரின் அடிப்படை உரிமைகளின் மீறல்களாகும். பயன்படுத்தப்படாத பல LEAVE என்னிடம் இருந்தன. அவற்றை நான் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அரசு விதிகளின்படி எனக்கு பல மாதங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்பட வேண்டும். துஷி சாரின் விதிகளோ தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரானதாக இருந்தன. அப்படி இருந்த போதிலும் நான் கற்பித்த மற்றும் எனது பிள்ளைகள் கற்கும் பாடசாலைக்கு எதிராக கை ஏந்த கூடாது என்பதால் மிகவும் வருத்தத்துடன் எனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க முடிவு செய்தேன்.
நான் ராஜினாமா செய்யவில்லை – நான் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன்!
ராஜினாமா கடிதத்தில் நடந்த அனைத்தையும் எழுதினேன். கடிதத்தின் உள்ளடக்கத்தை மாற்றி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என்று எழுதுமாறு துஷி சார் என்னிடம் கூறினார். நான் மறுத்தேன். ‘அந்தக் கடிதத்தில் நான் எழுதியவை அனைத்தும் உண்மை. எனவே அதை மாற்றத் தயாராக இல்லை’ என்று கூறினேன். ‘உங்கள் செயல்களுக்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று அவர் என்னை எச்சரித்தார். ‘உண்மை சொல்வதால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றால் அதற்கு நான் தயார்’ என்றேன்.
கல்லூரியில் நான் பணியாற்றும் காலத்தை சில மாதங்களாக நீடிக்க கல்வித் துறை பரிந்துரைத்தது. ZOE ல் நடந்த ஒரு சந்திப்பில் Director துஷி சாரிடம் எனது சேவையின் இறுதி நாளை பிற்போடுமாறு கேட்டுக்கொண்டார். ‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்த முடிவை மேல்மட்டத்தில் இருப்பவர்கள்தான் எடுக்க வேண்டும்’ என்று துஷி சார் கூறினார். இதற்கு பிரதியுத்தரமாக Director சொன்னார் – ‘யாருடைய ஒப்புதலையோ முடிவையோ நான் கேட்கவில்லை. பரராஜசிங்கம் டிசம்பர் மாதம் வரை உங்கள் கல்லூரியில் பணியாற்றுவார்’ என்றார்! இதுவும் துஷி சார் என் மீது வைத்திருந்த கோபத்தை அதிகரிக்க செய்தது.
எனது சேவை காலத்தின் இறுதிக்கு ஓரிரு மாதங்கள் இருக்கையில் துஷி சார் என்னை கண்டு ‘நீங்கள் magazine வேலையை முடிக்க தவறினால் உங்கள் Gratuity மற்றும் வேறு கொடுப்பனவுகளை வழங்க மாட்டேன்’ என்றார். அதற்கு நான், ‘சார் உங்களால் அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால் எனக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட அனைத்து Magazines ஐயும் நான் ஏற்கனவே சரி பார்த்து முடித்துவிட்டேன்.
எனது இராஜினாமாவை நீடிக்குமாறு கல்வித் திணைக்களம் என்னைக் கேட்ட போது நான் நானாக முன்வந்து ஞானராஜன் சாரிடம் இன்னும் ஒரு magazine ஐ EDIT பண்ண தருமாறு கேட்டு பெற்றுக்கொண்டேன். அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன். நான் போவதற்குள் அதையும் முடித்து விடுவேன்’ என்றேன். நான் கூறியதை போல் நான் பாடசாலையை விட்டு வெளியேற முன் அந்த magazine ஐ சரி பார்த்து முடித்தேன். இதை தனக்கு ஏற்பட்ட இன்னொரு தோல்வியாக துஷி சார் கருதினார்.
பழிவாங்கல்
என் மீது அதிபருக்கு இருந்த கோபம் அதிகரித்த வண்ணமே இருந்தது. கல்லூரியின் எனது இறுதி நாளில் அவர் என்னை வாழ்த்தவும் இல்லை. 17 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரை அனுப்ப வேண்டிய முறையில் என்னை அனுப்பி வைக்கவும் இல்லை. வெளியேறும் பொழுது கண்ணீருடன் வெளியேறியதை ஆண்டவர் ஒருவரே அறிவார்.
ஒரு பரிசளிப்பு விழாவில் கல்லூரியை விட்டு வெளியேறிய ஊழியர்களின் பெயர்களை வாசிக்கும் பொழுது எனது பெயரை துஷி சார் குறிப்பிடவில்லை. பரிசளிப்பு விழாவில் அதிபரின் அறிக்கையில் எனது 17 ஆண்டுகால சேவை குறிப்பிடப்படவில்லை. எனது பெயரை உச்சரிக்க விரும்பாத அளவுக்கு என்னுடன் என்ன பகையோ?
இறுதியில் என்னை பழி வாங்க நல்லதொரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. எனது மகனுக்கு செல்லவேண்டிய ஜெனரல் எக்ஸலன்ஸ் விருதை பறித்தெடுக்க திட்டமிட்டார்.
எனது மகன் Prefect ஆக கடமையாற்றும் பொழுது ஒரு மாணவன் பாடசாலை விதிகளை மீறும் செயற்பாட்டில் ஈடுபட்டதை கண்டு அவரை எச்சரித்துள்ளார். அதன் பின்னரும் அதே மாணவன் அதே தவறை செய்தார். அதற்கு எனது மகன் ‘அடிக்கவா? அல்லது இன்று Detention இல் நிற்க விரும்புறீரா?’ என்று அந்த மாணவனிடம் கேட்டார். ‘அடியுங்கள்’ என்று சொன்னதும் ஒரு முறை அடித்து விட்டார். இந்த தவறுக்காக Rev. N.J.Gnanaponrajah எனது மகனின் Prefect Badge ஐ கழற்றி எடுத்தார். இதனால் SP ஆகும் வாய்ப்பையும் எனது மகன் இழந்தார். குற்றத்திற்கான நியாயமான தண்டனை என்பதால் நானும் எனது மகனும் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டோம்.
இரு வாரங்கள் கழித்து, தண்டனை காலம் முடிந்து விட்டதை அடுத்து அவர் மீண்டும் Prefect ஆக்கப்பட்டார். கல்லூரியின் தண்டனை காலம் முடிந்தது தண்டனையும் முடிந்தது…
…ஆனாலும் துஷி சாரின் தண்டனை முடியவில்லை. எனது மகனாக பிறந்த குற்றத்திற்கான தண்டனைகள் காத்திருந்தன…
ஜெனரல் எக்ஸலன்ஸ் விருது பட்டியலில் எனது மகனின் பெயர் முதலாவது இடத்தில் இருந்தது. அதனை துஷி சார் நீக்கி இன்னொரு மாணவனை முதலாவது இடத்திற்கு கொண்டு வந்து புதிய பட்டியலை Staff Meeting ல் சமர்ப்பித்தார்.
இதில் என்ன வேடிக்கை என்றால் சிறு தவறை செய்த எனது மகனின் பெயரை நீக்கி அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்ட மாணவன் – சில குற்றங்களை செய்து Suspend செய்யப்பட்ட ஒரு மாணவனாவான்!
ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஜெனரல் எக்ஸலன்ஸ் விருதுக்கான தகுதியை அவர் இழக்கிறார் எனும் துஷி சாரின் கூற்றை நான் சவால் விடுகிறேன். ஒழுக்காற்று பிரச்சினைகள் இருந்த மாணவர்கள் கடந்த காலங்களில் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளனர். அது மட்டும் அல்ல! இந்த விருதுக்கான மாணவனை தேர்ந்தெடுப்பதற்கான புள்ளி அமைப்பில் பின்வரும் குறிப்பு இருந்தது:
‘ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாத மாணவர்களுக்கு 200 புள்ளிகள் வழங்கப்படும்’.
இதன் அடிப்படையில் ஒழுக்காற்று பிரச்சினைகள் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது தெளிவாகிறது. என் மகன் விண்ணப்பித்தான். பிறகு எதற்காக அவர் தகுதி நீக்கம் செய்யபட்டார்? ஏன் Staff Meeting க்கு வர முன்னரே அவருடைய பெயர் நீக்கப்பட்டது? பெயர் பட்டியலில் மாற்றங்களை தான் விரும்பிய படி அதிபரோ ஒரு தனி நபரோ செய்ய முடியும் என்றால் பிறகு ஏன் Staff Meeting நடத்தப்பட்டு அதில் கலந்துரையாடப்படுகிறது? அது வெறும் கண்துடைப்பு தானா?
ஏற்கனவே கூறியதை போல்இ எனது மகன் இரண்டு தடவைகள் தண்டிக்கப்பட்டு விட்டான். Senior Prefect ஆகும் வாய்ப்பை இழப்பதே கல்லூரியின் அதிகபட்ச தண்டனையாகும். ஒரு மாணவன் செய்த ஒரு தவறுக்கு அவரது தண்டனையும், தண்டனைக் காலமும் முடிந்த பிறகும் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுவது சரியா?
நாங்கள் அதிபரை சந்தித்து எமது கருத்துக்களை தெரிவித்த பிறகு இன்னொரு Staff Meeting கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் விண்ணப்பதாரர்களின் பட்டியல் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது – ஆனால் இம்முறை எனது மகனின் பெயர் அதிக மொத்த மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் இருந்தது. அப்பொழுது ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலின் பொழுது அதிகமானோர் அவருக்கு அந்த விருது வழங்கப்படவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்கள். அப்படி இருந்த பொழுதும் ‘இந்த ஆண்டுக்கான விருது யாருக்கும் வழங்கப்படாது’ என்று கூறி அதிபர் கூட்டத்தை முடித்துக்கொண்டார். இந்த முடிவு ஆசிரியர்களின் முடிவை பிரதிபலிக்கிறதா? அப்படியானால் இந்த முடிவுக்கு ஆதரவாக எத்தனை ஆசிரியர்கள் வாக்களித்தனர்? எத்தனை பேர் இதை எதிர்த்தனர்? அதிபர் எதிர்க்கிறார் எனும் அடிப்படையில் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதே உண்மை!
2019 ஆம் ஆண்டுக்கான ஜெனரல் எக்ஸலன்ஸ் விருதை எவருக்கும் வழங்காதது சரியா? பட்டியலில் 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ள மாணவர்களை ஏன் தேர்வு செய்யவில்லை?
எவருக்கும் இந்த விருதை வழங்காததன் மூலம் அதிபர் ஞானபொண்ராஜா காலத்தில் விளையாட்டு மற்றும் கல்வியில் எவரும் சிறந்து விளங்கவில்லை என்ற தவறான பிம்பத்தை மறைமுகமாக கொடுக்க முயற்சிக்கிறார் துஷி சார். லட்சக்கணக்கை நன்கொடையாகவும் பல்லாயிரக்கணக்கான ரூபாயை தவனைக் கட்டணமாகவும் எடுக்கும் பாடசாலையால் ஒரு சிறந்த மாணவனை கூட உருவாக்க முடியவில்லையா?
எமது பாடசாலை ஒரு கட்டத்தில் அனைத்து General Excellence க்கான விண்ணப்பங்களையும் தவறவிட்டது. அதன் பின்னர் மாணவர்களை விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. மூன்று Simple Pass இருக்கும் Suspend செய்யப்பட்ட மாணவன் ஒருவருக்கு இந்த விருதை வழங்க அதிபர் தயாராக இருந்தார். எமது கல்லூரியின் அதிபர் இத்தகைய வெளிப்படையான தவறுகளை செய்ய முடியுமானால் ஒரு இளைஞனின் தவறு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமா? அதுவும் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட வேண்டுமா? (அதிபரின் இன்னும் பல தவறுகள் உண்டு. அவற்றை நான் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.)
ஒரு குற்றத்திற்கு எவ்வளவு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நான் அதிபரை கேட்டபோது ‘அந்த நபர் பாடசாலையை விட்டு வெளியேறும் வரை தண்டனை தொடரும்’ என்று பதிலளித்தார். அதைத்தான் அதிபர் எனக்கும் செய்து வருகிறார். ஆனால் என் விஷயத்தில் நான் பாடசாலையை விட்டு வெளியேறிய பிறகும் அவர் என்னை தண்டிக்க முயற்சித்துகொண்டே இருக்கிறார். இதுதான் வேதனைக்குரியது.
எனது குறைகளையையும் ஆதங்கத்தையும் பகிரங்கமாக தெரிவிக்க விரும்பாத நான், அதிபர் மற்றும் Manager க்கு 7 மின்னஞ்சல்களையும், Governing Bodyக்கு இரண்டு மின்னஞ்சல்களையும், பழைய மாணவர் சங்கத்திற்கு இரண்டு மின்னஞ்சல்களையும், அதிபருக்கு ஒரு தனிப்பட்ட Whatsapp செய்தியையும், ஒரு தனிப்பட்ட மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன். எனது மின்னஞ்சல்களில் நான் எழுப்பிய 23 கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஏறக்குறைய 8 மாதங்களாக நீதிக்காக பரியோவான் குடும்பத்தாரிடம் மண்டியிட்டு நின்றேன். நீதி கிடையாததால் நீதியை தேடி வேறு இடங்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறேன். வாசகர்களாகிய நீங்கள் உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள்
எமது கல்லூரியின் ஆசிரியர் சங்கத்திற்கு எனது ஆதங்கங்களையும் வேதனைகளையும் தெரிவித்து கடிதம் எழுதி கல்லூரி விதிகளின்படி அதிபரிடம் நேரில் சென்று கடிதத்தை கொடுத்து ஆசிரியர் சங்கத்திற்கு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதிபர் செயலாளரிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். ஆனால் ஒப்படைக்கவில்லை. நான் அவருக்கு இரண்டு நினைவூட்டல்களை அனுப்பினேன். எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆசிரியர் சங்கத்திற்கு எனது பிரச்சனைகளை எடுத்துச் செல்லும் உரிமைகள் கூட பறிக்கப்பட்டுவிட்டன.
மேலும்இ அக்டோபர் 2003 முதல் 2005 இன் இரண்டாம் பாதி வரையிலான காலத்திற்கான ETF பாடசாலையால் வழங்கப்படவில்லை. இதையும் அதிபர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும் அதிபர் இதைப் பற்றி எதுவும் செய்யவில்லை. ஆகையால் வாழ்க்கை செலவு அதிகரித்து வரும் இந்த வேளையிலும் கூட இன்னும் ETF எடுக்காது இருக்கின்றேன்.
எனக்கும் எனது மகனுக்கும், அவரின் நண்பனுக்கும் நடந்தது வேறு எவருக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அடிமைத்தனமும் ஆதிக்கமும் தொடரக்கூடாது. பாரபட்சம் நீங்க வேண்டும். பழி வாங்கும் நடவடிக்கைகள் ஒழியவேண்டும். ஊழியர்களை குறிவைப்பது போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது. தமக்கு ஒரு சட்டமும் பிறருக்கு இன்னொரு சட்டமும் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிபர் நியாயம் தர மறுக்கின்றார். ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். Governing Body கூட எனது பிரச்சனைகளை அலட்சியம் செய்ய்துள்ளது. இந்நிலையில் நான் உங்களிடம் நீதி கேட்டு வருகிறேன். நீதிக்காக குரல் கொடுப்பதன் மூலம் இவ்வாறான சம்பவங்கள் வருங்காலங்களில் பரி. யோவான் கல்லூரியிலோ அல்லது வேறு எந்த பாடசாலையிலோ நடைபெறாமல் இருக்க உங்கள் ஆதரவை தாருங்கள்.
நான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை தர முடியுமானால் தாருங்கள். இதற்கு எதிராக குரல் கொடுத்து எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு மனம் உடைந்து மண்டியிட்டு நிற்கும்,
உங்கள்
கிறிஸ்டி பரராஜசிங்கம்

