Home புதினங்களின் சங்கமம் பெருமளவு ஐபோன்கள், சிம் அட்டைகள் மீட்பு!! நீர் கொழும்பில் நடந்த சம்பவம்!!

பெருமளவு ஐபோன்கள், சிம் அட்டைகள் மீட்பு!! நீர் கொழும்பில் நடந்த சம்பவம்!!

நீர்கொழும்பு ஏத்துக்கல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இலத்திரனியல் தொலைத்தொடர்பு
சாதனங்களுடன் சீனக் குடிமகன் உள்பட 3 பேரை சிறப்பு அடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 402 ஐ போன்கள், 17 ஆயிரத்து 400 சிம்
அட்டைகள்,மற்றும் 60 ரௌட்டர்கள் மற்றும் 3 மடிக்கணினி ஆகியவற்றை சிறப்பு அதிரடிப்படையினர்
கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.