புதினங்களின் சங்கமம்

தெருவில் குப்பை வீசியதை எதிர்த்த ஆட்டோச் சாரதியை காரில் இழுத்துச் சென்ற சிங்களவன் நையப்புடைப்பு!!

வீதியோரத்தில் குப்பை பொதியை வீசிவிட்டு செல்ல முயன்ற சொகுசு காரிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர் காரின் முன்பகுதியில் விழுந்த போது, அவர் ஆபத்தான நிலையில் சிக்கியதையும் பொருட்படுத்தாமல் ஒரு கிலோமீற்றர் தூரம் பயணித்த சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தகராறில் ஈடுபட்ட கார் சாரதி, திடீரென காரை இயக்கி செலுத்தினார். இதன்போது காரின் அருகில் நின்று சாரதியுடன் தகராற்றில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதியொருவர் காரை நிறுத்த முயன்றார். இதன்போது, அவர் காரின் பொனட்டில் விழுந்துள்ளார்.

காரின் பொனட்டில் ஒருவர் விழுந்து தவித்துக் கொண்டிருந்த நிலையிலும், காரை நிறுத்தாமல் சாரதி செலுத்திச் சென்றார். ஒரு கிலோமீற்றர் தூரம் தப்பிச் சென்ற கார், பனாகொடையில் மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றது.

காரை விரட்டி வந்த முச்சக்கரவண்டி சாரதிகள் குழு, கார் சாரதியை பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். காரின் முன்பகுதியில் சிக்கியிருந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவலைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (04) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.