முல்லைத்தீவு பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது.!
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வாடி ஒன்றில் வேலைக்கா வந்து நின்ற திருகோணமலையினை சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவர் பதின் அகவை சிறுமியுடன் தொடர்பினை ஏற்படுத்தி குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் அயலவர்களுக்கு தெரியவந்த நிலையில் அயலவர்களின் தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலீசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற் கொண்டுள்ளதுடன் சிறுமிக்கு 15 அகவையுடை சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டுள்ள குற்றச்சாட்டில் 30..01.23 இன்று இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைகாலமாக சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றமை அதிகரித்து காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
