யாழில் பிரபல பாடசாலை மாணவியை “கச்சான் கோது” என பட்டம் சூட்டி வீதியில் குக்குரலிட்ட மாணவன்!! கல்லால் எறிந்து துரத்திய மாணவி!!
யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நடுவீதியில் பலரும் பார்க்கும் போது மாணவன் ஒருவரை கல்லால் எறிந்து துரத்தித் துரத்தி தாக்கிய சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. சனநெருக்கடி மிக்க யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் நாவலர் வீதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது. பாடசாலை முடித்து சைக்கிளில் வீடு சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரின் பின்னால் சைக்கிளில் வேகமாக வந்த மாணவர்கள் இருவர் குறித்த ஒரு மாணவியை சுட்டி ”கச்சான் கோது” என கத்தியுள்ளார்கள். உடனடியாக அந்த மாணவி நடுவீதியில் சைக்கிளை விட்டுவிட்டு கற்களை எடுத்து அந்த மாணவர்களில் ஒருவரை துரத்திச் சென்று தாக்கியுள்ளார். மாணவி எறிந்த கல் மாணவனின் முதுகுப் பகுதியில் அணிந்திருந்த புத்தகப்பையில் பட்டு வீழ்ந்துள்ளது. மாணவியின் ஆக்ரோசத் தாக்குதலை அடுத்து மாணவன் நிலை குலைந்து ஓடித்தப்பியுள்ளான். இந் நிலையில் அப்பகுதியில் இருந்த வர்த்தகநிலையத்தில் நின்றவர்கள் மாணவர்களை பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் தப்பியதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவர்கள் தொடர்பாக பொலிசாரிடம் முறையிடுமாறு மாணவிகளிடம் கூறிய போதும் அவர்கள் அதனை கருத்தில் எடுக்காது சென்றதாக அங்கு நின்றவர்கள் தெரிவித்துள்ளார்கள். பாடசாலை விட்டு மாணவர்கள் செல்லும் நேரத்தில் நடந்த இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குறித்த மாணவர்களும் மாணவியும் பிரபல ஆண்கள், பெண்கள் பாடசாலையின் அடையாளத்துடன் கூடிய சீருடைகளை அணிந்திருந்தாக அங்குநின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

