புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கிளிநொச்சியில்  ஒரு பிள்ளையின் தாயான நேசறி ரீச்சருடன் ஓடிய லண்டன் குடும்பஸ்தர்!! பிள்ளைப் பராமரிப்புக்கு மாதா மாதம் காசு அனுப்ப கோரும் கணவன்!!

கிளிநொச்சியில் 24 வயதான நேசறி ரீச்சரான இளம் குடும்பப் பெண்ணுடன் லண்டனிலிருந்து வந்த 46 வயதான குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார். தனது 3 வயது ஆண் குழந்தையையும் விட்டுவிட்டு நேசறி ரீச்சர் லண்டன் குடும்பஸ்தருடன் சென்றுவிட்டதை ரீச்சரின் கணவன் உறுதிப்படுத்திய பின்னர், அப்பகுதி கிராம அலுவலரிடம் கூறி தனது குழந்தைக்கான பராமரிப்பு செலவை லண்டன் குடும்பஸ்தரிடமிருந்து பெற்றுத் தரும்படி கேட்டுள்ளாராம். நேசரி ரீச்சரின் கணவர் இறுதி யுத்ததின் போது காயங்களுக்கு உள்ளானவர் என்றும் கால் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வேலைக்கு செல்ல முடியாது வீட்டில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. தனது கணவனையும் பிள்ளையையும் நேசரி ரீச்சரே உழைத்து பராமரித்து வந்துள்ளார். அத்துடன் குறித்த குடும்பத்திற்கு உதவி புரிந்து வந்தவர் அந்த லண்டன் குடும்பஸ்தர் என கணவன் கிராமஅலுவலருக்குத் தெரிவித்துள்ளார். தற்போது நேசரி ரீச்சரின் பிள்ளையையும் கணவரையும் கணவரின் தங்கையே பொறுப்பெடுதுள்ளார். ரீச்சர் லண்டன் குடும்பஸ்தருடன் தலைமறைவானது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாட்டை கொடுக்குமாறு கிராம அலுவலரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது குழந்தையை பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.