யாழ் குடும்பஸ்தருக்கு 7 லட்சம் அனுப்பி கனடா சென்ற பின்னரும் காதலைக் கை விடாத குடும்பப் பெண்!! விவாகரத்துக்கு ஆயத்தமாகும் கணவன்!!
யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது உருவான காதலால் இரு குடும்பங்கள் சீரழிவை எதிர்நோக்கியுள்ளன. வடமராட்சியைச் சேர்ந்த இளைஞனும் தீவுப்பகுதியைச் சேர்ந்த யுவதியும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது காதலித்துள்ளார்கள். 2017 ம் ஆண்டு இருவரும் பட்டம் பெற்று வெளியேறிய பின் குறித்த இளைஞன் தனது காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தீவுப் பகுதியைச் சொந்த இடமாகவும் யாழ் நகர்பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட உணவகம் ஒன்றின் உரிமையாளரின் மகளான யுவதியின் வீட்டுக்கு காதலன் சென்று தாம் காதலிப்பதை பெற்றோருக்கு தெரியப்படுத்திய போது அவனுக்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் காதலியின் பெற்றோர். குறித்த இளைஞன் தங்களது சமூகத்திலும் பார்க்க தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதுடன் வறிய குடும்பப் பின்னணி உடையவன் என்பதாலும் காதலியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் தமது மகளையும் கடுமையாக அச்சுறுத்தி தாம் துாக்கில் தொங்குவோம் என பெற்றோர் கூறியதாகவும் தெரியவருகின்றது. இதையடுத்து யுவதி தன்னுடனான காதலை முறித்துக் கொள்ளும்படி காதலனுக்கு கூறியுள்ளார். இந் நிலையில் யுவதியை கனடாவில் உள்ள தமது துாரத்து உறவுக்காரின் மகனுக்கு 2018ம் ஆண்டு திருமணம் பேசி முடித்துள்ளனர் யுவதியின் பெற்றோர்.
சில காலம் தனது பேஸ்புக்கில் சோக கவிதைகள் பதிவிட்டுவந்த காதலனான வடமாட்சி இளைஞனும் இந்த வருட முற்பகுதியில் திருமணம் முடித்துள்ளார். இந் நிலையில் தனது முன்னாள் காதலி கனடாவில் இருந்து பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு கதைத்த போது மீண்டும் இருவருக்கிடையிலும் நல்ல காதலாக இருந்த அன்பு கள்ளக்காதலாக உருவாகி தொடர்ந்து வந்துள்ளது. தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை எனவும் தான் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதாகவும் ,தனது மனைவி கர்ப்பமாக உள்ளார் எனவும் வடமராட்சி கனடாவில் உள்ள தனது முன்னாள் காதலிக்கு கூறியுள்ளார். அத்துடன் கடந்த யூலை மாதம் தனது முன்னாள் காதலன் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கியதாகவும் கனடாவில் உள்ள காதலிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் கடந்த 3 மாதங்களில் 4 தடவைகள் தனது முன்னாள் காதலனுக்கு கனடாவிலிருந்து 7 லட்சம் ரூபாவரை பணம் அனுப்பியுள்ளார் பல்கலைக்கழக காதலி. வேலைக்கு செல்லாது குழந்தை ஒன்றுடன் வீட்டிலேயே தங்கியிருக்கும் தனது மனைவி இலங்கைக்கு தொடர்ச்சியாக தன்னிடமே பணம் கேட்டு அனுப்புவதை கணவர் சந்தேகப்படவில்லை. காரணம் தனது பாடசாலையில் கற்ற தனது வகுப்பு மாணவிகள் சிலரின் திருமணத்திற்கான உதவி எனக் கூறியே மனைவி தனது கணவரிடம் பணம் பெற்றுள்ளார்.
இந் நிலையில் கனடாவில் கணவர் வீட்டில் நின்ற சமயத்தில் மனைவியின் மொபைலுக்கு வட்சப் மெசேஜ் வந்துள்ளது. அந் நேரத்தில் மனைவி நல்ல நித்திரையில் இருந்ததால் எதேற்சையாக அந்த மெசேஜ்களைப் பார்த்த போது கணவர் அதிர்ந்துள்ளார். சாதரணமாக சந்தேகம் வராத மாதிரி அந்த இலக்கத்துடன் மனைவியின் வட்சப்பிலிருந்து தகவல் அனுப்பிய போது மனைவியின் முன்னாள் காதலன் என அவருக்கு புரிந்ததுடன் தனது பணம் இவனுக்கே அனுப்பபட்டதையும் அறிந்து கடும் கோபமுற்றுள்ளார். இதன் பின்னர் மனைவி தாக்குதலுக்கு உள்ளானதாகவும் இதனால் பொலிஸ் கணவனை கைது செய்து பின்னர் விடுவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. கணவனும் மனைவியும் தற்போது பிரிந்துள்ள நிலையில் கணவரால் மனைவியின் யாழ்ப்பாணத்தில் உள்ள பெற்றோருக்கு தகவல் அனுப்பபட்டுள்ளது.
இதையடுத்து பல்கலைக்கழக பட்டதாரியான குறித்த கனடா குடும்பப் பெண்ணின் பெற்றோால் பொலிஸ் நிலையத்தில் முன்னாள் காதலனுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள தனது மகளை காதலித்த புகைப்படங்களை காட்டி அச்சுறுத்தி தொடர்ச்சியாக பணம் பறித்து வருவதாகவே பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர் கனடா பெண்ணின் பெற்றோர். இதையடுத்து பொலிசார் மேற் கொண்ட விசாரணையில் முன்னாள் காதலியின் சம்மதத்துடனேயே பணம் அனுப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது, இதையடுத்து பெற்றோரை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளார்கள்.
இதே நேரம் பொலிஸ் நிலையம் வந்த கனடா குடும்பப் பெண்ணின் முன்னாள் காதலனின் மனைவியிடமும் குடும்பப் பெண்ணின் பெற்றோர் இது தொடர்பாக கூறியதால் கர்ப்பிணியான அந்த அப்பாவிப் பெண்ணும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரியவருகின்றது,
