புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் தனது அக்காவின் கணவனை நம்பி காணியின் அற்றோனிக் பவர் அனுப்பிய சுவிஸ் குடும்பப் பெண்!! 3 கோடிக்கு காணியை விற்று அத்தான் தலைமறைவு!!

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனது 20 பரப்பு காணியை விற்பதற்காக தனது அக்காவின் கணவனுக்கு அற்றோனிக் பவர் கொடுத்த சுவிஸ்லாந்தில் வாழும் குடும்பப் பெண் தற்போது நடுத்தெருவில் வந்துள்ளார். வங்கி வட்டி அதிகரித்துள்ளத தற்போதய சூழ்நிலையில் தனக்கு சீதனமாக தந்த காணியை விற்று அந்தப் பணத்தை இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் வைப்பிலிடுவதற்காக சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ் வலிகாமத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் முயன்றுள்ளார். அதற்காக தனது அக்கா மற்றும் அக்காவின் கணவருக்கு காணி விற்பதற்கான அற்றோனிக்பவரை சுவிஸ்லாந்திலிருந்து அனுப்பியதாகத் தெரியவருகின்றது. கடந்த மாதம் அக்காவும் அத்தானும் காணியும் விற்று காசும் பெற்றுவிட்டார்கள் என்பதை அறிந்த சுவிஸ் குடும்பப் பெண் தனது அக்காவை தொடர்பு கொண்டுள்ளார். பணம் அத்தானின் வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் சுவிஸ்லாந்திலிருந்து இலங்கை வந்து வங்கிக் கணக்கு ஆரம்பித்த பின்னரே உனது கணக்கில் வைப்பிலிடமுடியும். நீ வந்தால் மாத்திரமே கணக்கு ஆரம்பிக்கலாம் என அக்கா கூறியுள்ளார். இதனையடுத்து சுவிஸ் பெண்ணும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகளும் கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் வந்த போது அக்காவின் கணவர் வேலைவாய்ப்புக்காக மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக அக்காவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கை கடும் அதிர்ச்சியுற்றார். தனது பணத்தை தனது வங்கிக் கணக்கில் போடுமாறு அறிவுறுத்திய போது அது அத்தானின் கணக்கில் மட்டுமே உள்ளது. அவர் அடுத்த வருடம் வந்துவிடுவார் அதன் பின்னர் அந்தப் பணத்தை உனது வங்கியில் வைப்பிலிடலாம் என அக்கா கூறியதால் தங்கை கடும் விரக்தி நிலைக்கு சென்றுள்ளார், அத்துடன் தங்கையை இலங்கையிலேயே நின்று பணத்தை பெற்ற பின் சுவிஸ் வருமாறு தங்கையின் கணவர் தனது பிள்ளைகளுடன் சுவிஸ் சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது.

இதே வேளை அக்காவின் கணவர் மலேசியா செல்லவில்லை எனவும் அவர் முல்லைத்தீவு விசுவமடுவில் அவரது தங்கையின் காணியில் தங்கியுள்ளதாகவும் அக்காவுடன் தங்கியுள்ள தாயார் கூறியுள்ளார். இதனையடுத்து தங்கை பொலிசாரின் உதவியை நாடியுள்ளதாகத் தெரியவருகின்றது. வலிகாமம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் உதவியாளரான அத்தான் எந்தவித போதை மற்றும் குடி வகைகளுக்கு அடிமையாகாதவர் என்பதாலும் நல்ல பண்பானவர் என தான் கருதியதாலும் தான் நம்பி மோசம் போனதாக தங்கை கதறியழுதவண்ணம் உள்ளார். இதே வேளை வங்கியின் வட்டிக்கு ஆசைப்பட்டு அத்தான் சில மாதகாலம் தனது கணக்கில் குறித்த தொகையை வைப்பிலிட்டதாகவும் அதற்கிடையில் தங்கை வந்ததால் அந்த வட்டிப் பணம் கிடைக்காது என எண்ணி அந்தக் காலம் வரை அத்தான் தலைமறைவாக இருக்கலாம் எனவும் அத்தானின் உறவுகள் கூறியதாக தங்கை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.