புதினங்களின் சங்கமம்

மோட்டார் சைக்கிளை அடகு வைத்து போதைப் பொருள் வாங்கும் இளைஞர்கள்!! யாழில் நடப்பது என்ன? (Video)

போதை பொருள் வாங்க வருவோரிடம் பணம் இல்லாத போது அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் , கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை அடகாக எடுத்துக்கொண்டு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதை வியாபாரிகள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் போதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபரிகள் தொடர்பிலான இரகசிய தகவல் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்றமையை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிராம் 270 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை ,அவர்களிடம் போதைப்பொருளை வாங்க வருவோர் பண பற்றாக்குறை ஏற்பட்டால் , தமது கையடக்க தொலைபேசிகள் , மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடகாக வைத்து போதை பொருளை வாங்கி செல்வார்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் போதைப்பொருள் வாங்குவதற்காக சந்தேக நபர்களிடம் அடகாக ஒப்படைக்கப்பட்ட 07 கையடக்க தொலைபேசிகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் பெறுமதியான நவீன ரக மோட்டார் சைக்கிள் என்பனவும் , பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

May be an image of 5 people and people standingNo photo description available.May be an image of phone and screenMay be an image of 1 person and text that says "காயங்களுடன் யாழ்ப்பு கட1:37 325 இத திங்கட் திழிமை 17 ஒக்ரோய் 2022 மின்சாதனங் நடமாடும் WILJO 2 யிர்கொல்லி ஐஸ் வியாபாரரிகள் கைதுு மன்னாரிலிருந்து உயிர்கொல்லி போதைப்பொருள் பணம் இல்லாதவர்கள் பொ ருள்களை அடகு வைத்து கொள்வனவு அலைபேசி, மோட்டார் சைக்கிள் மீட்பு htrcn ae பொலிஸா பாஸ்கரோதயா வில நேற்று மா கடத்தி வந்து விற்பனை செய்து வந்த உயிர்கொல்லிஸ்போதைப்பொருளை வியாபாரிஒருவர்உப்ப மூன்று மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பேரை பொம்மைவெளிப் வல்லைச் சந்தியில் தொடரும் வழிப்பறி நேற்றும் 9 பவுண் தாலிக்கொடி அறுப்பு யாழ்ப்பாணம். ஒக். 17 வல்லைச் சந்திக்கு அண்மையாக நேற்று மதியமும் வழிப்பறிச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பலர் பார்த்திருக்கபட இந்தச் சம்பவம் இடம்பெற் றுள்ளது. கடந்த ஒரு வாரத்தினுள் ஆவது 11> ஆங்கிலமொழி கற்கைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருக! முன்னாள் எம்.பி. தவறுகளைத ஒரு சந்தர் ஆ சிட கொ வி"