யாழில் மணப்பெண்ணை அழைத்துச் சென்ற கார் விபத்து!!!
யாழ்ப்பாணம்-பண்டத்தரிப்பு பகுதியில் இன்று திருமண வீட்டிற்கு மணமக்களை அளைத்து செல்வதற்காக சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று காலை திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச்சென்ற குறித்த கார் வீதியை விட்டு விலகிமையாலே விபத்து இடம் பெற்றுள்ளது.
இருப்பினும் காரில் சென்றவர்களுக்கு எவ்வித ஆபத்தும்இடம் பெறவில்ரை என தெரிவிக்கப்பட்ட நிலையில் கார் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து பிறிதொரு கார் வரவளைக்கப்பட்டு மணப்பெண், திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் வீதியை விட்டு விலகி வடிகாலுக்களுக்குள் இறங்கிய நிலையில் காருக்குள் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் குறித்த விபத்தில் சாரதி உட்பட எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

