புதினங்களின் சங்கமம்

பரிதாபமாக பலியான இளம் வைத்தியர்!!

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த தீபால் அமரசூரிய என்ற 30 வயதுடைய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் நிமோனியாவால் ஏற்பட்ட பக்டீரியா தொற்று காரணமாக இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்று (14) காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகேவினால் மேற்கொள்ளப்பட்டது.

பிரேதப் பரிசோதனையின் போது, ​​அவர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்ததும், சில வாரங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.