புதினங்களின் சங்கமம்

துருக்கி சரக்கு விமானம் கட்டுநாயக்காவில் ஊழியர்களின் கவனக்குறைவால் விபத்துக்குள்ளானது!! நடந்தது என்ன? (Photos)

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு (Cargo) விமானமொன்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து பொருட்களை ஏற்றிவந்த விமானம், 45 மெட்ரிக் தொன் நிறையுடைய ஆடைகளை ஏற்றிக்கொண்டு நாட்டிலிருந்து மீண்டும் புறப்படவிருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலவும் கடும் காற்று காரணமாக விமானத்திற்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்று விமானத்தின் இயந்திரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த விமானம் நாட்டிலிருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

May be artMay be an image of aeroplaneMay be an image of aeroplane