பல்கலைகழக மாணவிக்கு நாயால் வந்த சாவு..!

இச்சம்பவமானது இன்றையதினம் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பிசிஏ) இளங்கலைப் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 30ஆம் தேதி பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்த வேலையில் நாய் ஒன்று அவரை கடித்துள்ளது.

இதனையடுத்து மாணவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ரேபிஸ் நோயிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளதுதையடுத்து நளமுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

மாணவிக்கு மீண்டும் காய்ச்சல் தொற்று வந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவருக்கு ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)