புதினங்களின் சங்கமம்

எச்சரிக்கை‼️ நாட்டைவிட்டு வெளியேறுவோரை முகவர்களே காட்டிக்கொடுப்பு‼️‼️‼️

 

நாட்டைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறும் இடப்பெயர்வாளர்கள் பற்றிய தகவல்களைக் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு வழங்குகின்றனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கடல்மார்க்கமாக நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகின்றன.

இந்தநிலையில் வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துவிட்டு படகுக்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குகின்றனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
#srilankaeconomycrisis #srilankainflation #EconomicCrisisSL