புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் சாராய வெறியில் இருந்தவர் ரயில் மோதி உடல் சிதறிப் பலி!! (Photos)

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் ரயில் தண்டவாளத்தில் இருந்த முதியவரை தொடருந்து மோதித்
தள்ளியதில் உடல் சிதறி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசேந்திரம் (62) என்பவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த தபால் சேவை தொடருந்தே இந்த விபத்தைச் சந்தித்தது.

முதியவரின் கைப்பையிலிருந்து சாரயப் போத்தல்கள் உள்ளிட்ட குடிவகைகள் மீட்கப்பட்டன என்று
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அவர் தினமும் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில்
இருப்பதாக அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

முதியவரின் சடலத்தை ஏற்றி அடுத்த ரயில் நிலையத்தில் ஒப்படைத்து தபால் சேவை தொடருந்து
பயணத்தைத் தொடர்ந்தது.