இனந்தெரியாத நபரின் கத்திவெட்டில்
இருவர் படுகாயமடைந்தனர்!
பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் கத்திவெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்றிரவு 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் {வயது-57}, பகிரதன் {வயது -41} ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 7.54 மணிக்கு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதுவரை அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை.







